நீர்;த்தேக்கத்தினை பார்வையிட சென்ற மாணவனை காணவில்லை – வவுனியாவில் சம்பவம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார்.

தோணிக்கல் பிரதேசத்தை சேர்ந்த தியாகராசா தணியன் என்ற மாணவனே காணாமற்போயுள்ளார்.
அண்மையில் வவுனியாவில் பெய்த கனமழையின் காரணமாக வவுனியா புதுக்குளத்தில் அமைந்துள்ள நீர்தேக்கம் நிரம்பியயுள்ள நிலையில் மேலதிக நீர் சுருங்கை வழியாக வெளியேறி வருகின்றது.
இதனை பார்வையிடுவதற்காக குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இன்று மதியம் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது நீர் வழிந்தோடும் வாய்க்கால் பகுதியில் அவர் இறங்கிய நிலையில் நீரில் மூழ்கியுள்ளார்.
இதனை அவதானித்த அவரது நண்பர்கள் நீருனுள் இறங்கி இளைஞரை நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை.
மேலும் இச் சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிசாருக்கும் தெரியப்படுத்தப்பட்ட நிலையில் , பொலிசார் மற்றும் பிரதேச வாசிகளால் இளைஞரை தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Share this Article