நாளைய தினமும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த பலருக்கு ஆய்வுகூட பரிசோதனைகள்
செய்யப்படும்.
இன்றைய பரிசோதனை முடிவுகளுக்கு மேலதிகமாக உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் எடுக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் 104 பேருக்கான பரிசோதனை நாளை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் நடைபெறும் . இது தவிர 114 பேருக்கான மாதிரிகள் அனுராதபுர ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்யப்படும்.
தொடர்ந்து வரும் நாட்களில் மேலும் பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.
இவர்களில் சிலருக்கு தொற்று இருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டாலும் எதிர்வரும் நாட்களில் பரிசோதனை முடிவுகள் வெளியாகும் போது மாத்திரம் தொற்று எண்ணிக்கை பற்றி உறுதிபட கூற முடியும்.