வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள நிவர் புயலானது கடந்த நான்கு மணி நேரமாக நகராது அதே இடத்திலேயே காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்காக 291 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது ( 24.11.2020, 12.28 பி.ப.) புயல்கள் தோற்றம் பெற்று நகராமல் இருப்பது, அவை வீரியம் பெறுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும். இதன் நகர்வில் உள்ள தாமதம் காரணமாக கரையைக் கடக்கும் காலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.