நாட்டில் மேலும் 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 279 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் ஏனைய 21 பேர் சிறைச்சாலை கொரோன கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30 375ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 7970 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.