நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் முக்கிய தகவல்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தயாரித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்ய இந்தியாவிடம் இருந்து அதிகப்படியான எரிபொருளைக் கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்துச் செலவு குறைவு என்பதால் இந்திய நிறுவனங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.சிங்கப்பூர் ஊடாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் திறந்தே உள்ளது.

இதேவேளை, வளைகுடா பிராந்தியத்தில் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment