நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் 03 மாதங்களின் பின்னர் இன்று(பெப். 22) காலை 83 பயணிகளுடன் நாகப்பட்டினத்திலிருந்துபயணத்தை ஆரம்பித்து காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும்மாலை 85 பயணிகளுடன்காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்துநாகபட்டினத்தை சென்றடைந்துள்ளது.
இந்த கப்பல் சேவையானது வாரத்தில் செவ்வாய் கிழமை தவிர்ந்து ஏனைய 6 நாட்களும் இடம்பெறும் என கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.