நாகபட்டினம்- காங்கேசன்துறை கப்பல் கட்டணம் குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழகம் நாகப்பட்டினம் மற்றும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்குஇடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம்குறைக்கப்படவுள்ளதாக

கப்பல் சேவையை முன்னெடுத்துள்ள சுபம் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜன்தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்…

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடந்த ஓகஸ்ட் மாதம்முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அதில் கோடை விடுமுறை முன்னிட்டு பயணிகளை கவரும்விதமாக தற்போது 8,500 இந்திய ரூபாயாக உள்ள இருவழிக் கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும் இலவச லக்கேஜ் இனி 22 கிலோ வரை அனுமதிக்கப்படும் என்றும் அதில் 7 கிலோ கைப்பையும், 15 ஒருகிலோ லக்கேஜ் இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜூன் முதல் வாரத்தில் 250 பேர் பயணிக்க கூடிய கப்பல் இயக்கப்படஉள்ளதாகவும், கார்கோ கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

Share this Article