நல்லூா் முருகன் ஆலயத் திருவிழாவின்போது பக்தர்கள் 300 பேரையேனும் ஆலய வளாகத்துக்கு அனுமதிக்க ஆவண செய்யுமாறு கோரி ஜனாதிபதி கோதாபாய ராஜபக்சவுக்கு, யாழ். மாநகர சபை பிரதி முதல்வர் துரைராசா ஈசன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே நயினாதீவு நாதகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் மடு தேவாலய திருவிழாக் காலங்களில் குறைந்த பட்சம் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது போன்று நல்லூருக்கும் அனுமதிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நல்லூக் கந்தசாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஜூலை-24 ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறையும் பக்கத்தா்களின் பங்கேற்புடனோ அல்லது பங்கேற்பு இன்றியோ இந்து மத குருமார்கள் மற்றும் ஆலய ஊழியா்களின் உதவியுடன் வழமைபோன்று திருவிழா இடம்பெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆலய நிர்வாகம் இதில் தலையிடாது.