நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் உள்ள விடுதிகளைப் பதிவு செய்தல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்துவிடுதிகள்,  தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம்பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்தமாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும்ஜூலை30 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக்காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம்ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும். பெற்றுக்கொண்டவிண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30.07.2025 புதன்கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்கவேண்டும்.

நல்லூர் பிரதேச சபையின் இவ் பகிரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்துதங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள்பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேசசபை மேற்கொள்ளும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் அறித்துள்ளார்.

அறிவித்தல் கடித்த்தில் காணப்படும் QRCode இனை வருடல் Scan செய்வதன்மூலமும் விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கிக் கொள்ளமுடியும்.

Share this Article