நல்லூர் கந்தன் பெரும் திருவிழா காளாஞ்சி கையளிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரலாற்றுப் பெருமை பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந் திருவிழா, எதிர்வரும் ஜூலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, இன்று (மே 27) யாழ் மாநகர சபைக்கு, பாரம்பரிய சம்பிரதாயத்தைப் பின்பற்றி, திருவிழாவிற்கான பட்டோலையுடன் கூடிய காளாஞ்சி வழங்கப்பட்டது.

திருவிழா காலத்தில் ஆலயச் சுற்றுப்புறம் பராமரிப்பு, பக்தர்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்தல், வீதிகளில் போக்குவரத்து தடைகள் அமைத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்துக்கு வழிவகுத்தல் உள்ளிட்ட பணிகளில் யாழ். மாநகர சபை பங்களிக்க உள்ளது.

நல்லூர் கந்தசுவாமி பெருவிழாவை முன்னிட்டு, இக்காளாஞ்சி வழங்கும் நிகழ்வு பாரம்பரியமிக்க வழிப்படி நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Article