நயினாதீவு ஸ்ரீ தில்லைவெளி பிடாரி அம்பாள் ஆலய பிரதான வீதி புனரமைப்புத்திட்டத்தின் ஆலோசனைக் கூட்டமும், நிதி சேகரிப்பு ஆரம்ப நிகழ்வும் நேற்றையதினம்( ஜனவரி19) கனடா நாட்டில் இடம்பெற்றது.
நயினாதீவைச் சேர்ந்த கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் குறித்த வீதி புனரமைப்பு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான நிதி சேகரிப்புக்கான ஆரம்ப நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.