சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு முதலாவது நிகழ்வாக நயினாதீவு மத்தி (J/35) கடற்கரையில் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டிலும், தாரணி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பிலும் கடற்கரையை துப்புரவு செய்யும் நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில் J/34, J/35 பிரிவு கிராமசேவை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பிரதேசசபை ஊழியர்கள் இணைந்து வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டது. தொடர் ஐந்து நாட்கள் இப் பணிகள் பல நடைபெறவிருக்கிறது.
நிரல் அட்டவணை பின்வருமாறு
யாழ் பண்ணை – 18.09.2023
அல்லைப்பிட்டி – 19.09.2023
சேந்தங்குளம் – 20.09.2023
பருத்தித்துறை – 21.09.2023
நெடுந்தீவு – 22.09.203