நயினாதீவுக்கு மின்சாரம் வழங்கும் மின் இயந்திரங்களில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரம் சில நேரங்களில் துண்டிக்கப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழுதடைந்த மின் இயந்திரம் காரணமாக தற்போது குறைந்த சக்தி கொண்ட மற்றொரு இயந்திரத்தின் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் மின்பாவனையை சிக்கனமாக மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, இரவு 12:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை தேவையற்ற மின்பாவனைகளை குறைத்தால் மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படக்கூடும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.