புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி கருணாகரன் சாரதாம்பாள் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு சூழலியல் மேம்பாடு அமைவனம் – Soozhagam – சூழகம் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ரூபாய் 50000 நிதியுதவியில் புங்குடுதீவு முதலாம் வட்டாரம் பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அருகே காணப்படுகின்ற மூன்று நன்னீர் கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டதோடு தூர்ந்து காணப்பட்டிருந்த நன்னீர் கிணறொன்றும் தூர்வாரப்பட்டது .
அத்தோடு அப்பகுதியில் சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டதோடு , மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன .