நண்பர்கள் வட்டம் நெடுந்தீவு அமைப்பினர் இம் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் போயா தினங்களில் நெடுந்தீவினை மையப்படுத்தி வளவாளரின் உதவியுடன் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை மேற்கொள்ளத் திட்டமிட்டு முதற்தடவையாக நெடுந்தீவின் ஆரம்ப கல்வி நிலையும் எதிர்கால திட்டமிடலும் எனும் தலைப்பில் முதலாவது கலந்துரையாடல் நிகழ்வு இடம் பெற்றது
இந்நிகழ்வில் பாடசாலைகள் அதிபர்கள், ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் சமூக அமைப்பு பிரதி நிதிகள் என 21 பேர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர் இந் நிகழ்வின் வளவாளராக நெடுந்தீவினை சார்ந்த பல்வேறு புலமை கொண்ட மதிப்பிற்குரிய முன்னாள் உதவி மாவட்ட செயலர் திரு.மரியாம்பிள்ளை செல்வின் அவர்கள் கலந்த கொண்டு நிகழ்வினை நடாத்தினார்.
கலந்துரையாடல் நிகழ்வினைத் தொடர்ந்து வளவாளரின் உதவியுடன் நண்பர்கள் வட்ட அங்கத்தவர்கள் இணைந்து எதிர்கால ஆரம்ப பிரிவிற்கான கற்றல் நடவடிக்கைகள் தொடர்பான திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.