வருடாந்தம் தொழி்ல் திணைக்கள யாழ் அலுவக உத்தியோகத்தர்களினால்ஒழுங்குசெய்து நடாத்தப்படும் ஒளி விழா – 2024 நிகழ்வானது இவ்வருடமும்திணைக்கள மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம் (டிசம்பர்19) சிறப்பான முறையில் இடம்பெற்றது.
ஒளியேற்றல் திகழ்வினை தொடர்ந்து அருட்தந்தை ரவிராஜ் அடிகாளாரின் ஆசிச்செய்தியுடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சிறார்களின் கரோல்கீதம், விவாத அரங்கம், நடனம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகள் ஆற்றுகைசெய்யப்பட்டதுடன் , நத்தார் தாத்தா வருகை மற்றும் அலுவலகஉத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட தொழில் அலுவலகம் , வட மாகாண தொழில் அலுவலகம், வட மாகாண தொழிற்சாலை பரிசோதனை பொறியியலாளர் அலுவலகம் என்பவற்றின் அலுவலர்கள், இடமாற்றம் பெற்ற சென்ற உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.