தொழிற்சங்கங்கள் தமது உறுப்பினர்களின் நலனைப் பேணுவதுடன், அத்தியாவசிய சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் அக்கறைசெலுத்த வேண்டும் என அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன்ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலின் போது, அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள்சங்கம் பல முக்கிய கோரிக்கைகளையும் கவலைகளையும் முன்வைத்தது. வடமாகாண உள்நாட்டு மருத்துவ திணைக்களத்தில் புதிய பதவிகளைஉருவாக்குமாறும், தற்போதுள்ள வெற்றிடங்களை உடனடியாக நிரப்புமாறும்அவர்கள் வலியுறுத்தினர். சிறிய ஊழியர்களுக்கான பதவி உயர்வுகளையும், தாதிய உத்தியோகத்தர்களை நியமிக்குமாறும் சங்கம் கோரியதுடன், வடமாகாணத்தில் இதுவரை உள்நாட்டு மருத்துவ திணைக்களத்தின் கீழ்தாதியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
மருத்துவ அதிகாரிகளுக்கான தெளிவான இடமாற்றக் கொள்கைகள் இல்லாமைமற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு குறிப்பிட்டநிலையங்கள் ஒதுக்கப்படாமை குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன. மேலும், வருகைப்பதிவு நடைமுறைகளில் உள்ள முரண்பாடுகளும் சங்கத்தால்சுட்டிக்காட்டப்பட்டன; அதாவது, மாகாண திணைக்களத்தின் கீழ் பணிபுரியும்மருத்துவ அதிகாரிகள் கைரேகை வருகைப்பதிவு இயந்திரங்களைப்பயன்படுத்தத் தேவையில்லை, ஆனால் உள்ளூராட்சி அமைப்புகளின் கீழ்உள்ளவர்கள் அவ்வாறு செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த ஆளுநர் , சங்கத்தால் எழுப்பப்பட்டவிடயங்கள் குறித்து பொருத்தமான மற்றும் உடனடி நடவடிக்கைகளைஎடுக்குமாறு மாகாண சுகாதார செயலாளருக்கு உத்தரவிட்டார்.
இதன்போது வடமாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்), மாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர், மாகாண உள்நாட்டு மருத்துவ திணைக்களஆணையாளர், உதவி பிரதம செயலாளர், மற்றும் சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய மாகாண அதிகாரிகள் கலந்துகொண்டனர்.