யாழ்ப்பாணம் நிலாவரைப் பகுதியில் தொல் பொருள் திணைக்களத்தினர் மீளவும் பணியினை ஆரம்பித்துள்ளனர். அந்தப் பகுதியில் நிலத்தை தோண்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதால் அங்கு பரபரப்பான நிலமை ஏற்பட்டுள்ளது.
நிலாவரை கிணற்றிற்கு அருகில் தொல் பொருள் திணைக்களத்திற்கு சொந்தமென அடையாளப்படுத்த பகுதியில் இன்று துப்பரவு பணியில் ஈடுபடவுள்ளதாக நேற்று வலி கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் அவர்களிற்கு தொல் பொருள் திணைக்களத்தில் இருந்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எனினும் தகவலினை எழுத்து மூலம் வழங்கும் படி நிரோஸ் அவர்கள் பதில் அளித்திருந்தார். எனினும் அதனை வழங்காது இன்றைய தினம் சம்பவ இடத்திற்கு தொல் பெர்ருள் திணைக்களத்தினர் விரைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் வலி கிழக்கு பிரதேச சபைத் தலைவர் நிலமையை அவதானிக்க சென்றுள்ளதாகவும். அவரை மிரட்டும் பாணியில் புலனாய்வாளர்கள் வீடியோ படம் பிடித்து வருவதாகவும் அறிய முடிகின்றது.