தேர்தல் நடைபெறும் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்குஅமைய செயற்படுகிறோம். திட்டமிட்டதற்கு அமைய மே மாதம் 06 ஆம் திகதிஉள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர்நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பில் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளன. தபால்மூல வாக்களிப்புக்கான வாக்காளர் அட்டைகள் தபால் திணைக்களத்துக்குஒப்படைக்கப்பட்டு, அவை தற்போது விநியோகிக்கப்படுகின்றன. எதிர்வரும்வாரமளவில் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் ஆணைக்குழுவுக்குஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் தபால்மூலவாக்களிப்பு நடத்தப்படும். இந்த மூன்று தினங்களில் வாக்களிக்க தவறும் அரசஉத்தியோகஸ்த்தர்கள் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டதெரிவத்தாட்சி அலுவலகத்தில் வாக்களிக்க முடியும்.

தபால்மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து அரசஉத்தியோகஸ்த்தர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். உள்ளூராட்சிமன்றத்தேர்தல் குறித்து நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமையசெயற்படுகிறோம்.

திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத்தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்படும். நியாயமானதும், சுதந்திரமானதுமானவகையில் தேர்தலை நடத்துதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்

Share this Article