தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்ததகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களை தேர்தல் ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சிசபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கைஎடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கதெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவுஅறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள்மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளைசமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share this Article