கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் நேற்று (ஜனவரி 03) ஊர்காவற்துறை பகுதியில் விஜயம் செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, அவர்கள் ஊர்காவற்துறை இறங்குதுறையையும் அங்கு அமைந்துள்ள படகு திருத்தும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தால் திறந்துவைக்கப்பட்ட படகு திருத்தும் நிலையம் தற்போது செயலற்ற நிலையில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது. இதுவரை அங்கு ஒரு படகே திருத்தத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதனை முறையாக செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.