தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரால் நடத்தப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(டிசம்பர் 4) காலை நாடாளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது.
இதனால், அவ்விடத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், பத்தரமுல்லை – பொல்துவ பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் கூறியுள்ளனர்.