தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனதெரிவித்துள்ளார்.
நேற்று (ஜூலை10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அமைச்சர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேருந்து கட்டணத்தில்மட்டுமே தலையிட முடியும் எனவும், ஆனால் பாடசாலை வேன்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில்சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
“முச்சக்கர வண்டிகள் சிறந்த பொதுச் சேவையைச் செய்வதை நாங்கள்ஏற்றுக்கொள்கின்றோம்.
எனினும் அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.
ஆனால் அதற்கு தேவையான அதிகாரங்கள் இல்லாததால், தேசிய போக்குவரத்துஆணைக்குழு சட்டத்தில் முழுமையாக திருத்தம் செய்துள்ளேன்…
தற்போதைய நிலைமையை மாற்ற, சட்டமா அதிபர் திணைக்களத்திற்குசட்டமூலம் அனுப்பப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
“அதாவது, தற்போது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, பேருந்துகட்டணத்தில் மட்டுமே தலையிட முடியும்.
பாடசாலை வேன்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கானவிதிமுறைகளை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மேற்கொள்ளும்வகையில் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அனுமதியும்கிடைத்துள்ளது.
இந்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியாகவெளியிடப்பட்டு, நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.
இதன் மூலம் மீட்டர் பொருத்துதல், பற்றுச்சீட்டு கோரினால் அதனை வழங்குதல்போன்றவற்றை உரிய முறையில் செயல்படுத்த முடியும்” என்றார்.