தேசிய தீபாவளிப் பண்டிகை – 2025 ஹட்டன் நகரில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய,  கலாசார திணைக்களம்   ஆகியவை இணைந்த ஏற்பாட்டில், தேசிய தீபாவளிப்  பண்டிகை  – 2025  நிகழ்வானது ஹட்டன் நகரில் கொண்டாடப்படவுள்ளதுஎன்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

சிறப்புமிகு அதிதிகளின் பங்குபற்றுதலுடன், ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்ஆலயத்தில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, காலை 9 மணியளவில்

விசேட பூஜையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இந்து சமய அறநெறிப் பாடசாலைமாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகளுடன் கூடிய அரங்க நிகழ்வுகள்ஹட்டன்,  பிரின்ஸ் திருமண மண்டபத்தில், இந்து சமய ஆன்மிக, கலை, கலாசாரஅம்சங்களை வெளிப்படுத்தி அதிதிகளை ஊர்வலமாக அழைத்துவரும்  நிகழ்வினைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள அன்றைய தினத்தில், சிறப்பம்சமாக, இலங்கை,  தபால் திணைக்களத்தால் தீபாவளி – நினைவு முத்திரையும்வெளியிடப்படவுள்ளது.

Share this Article