தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தோர் மற்றும் விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றினை விடுத்துள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு அவசரம் கருதி பொதுத் தேர்தலுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை விண்ணப்பிப்பவர்களுக்காக தற்காலிக அடையாள பத்திரம் வழங்க தீர்மானித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அடையாள பத்திரத்தை பயன்படுத்தி பொது தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும், அதில் ஆட்பதிவு ஆணையாளர் நாயகத்தின் கையொப்பம் உள்ளக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் 29ஆம் திகதியின் பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்களுக்காக பிரதேச செயலகத்தில் தற்காலிக அடையாள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆட்பதிவு திணைக்களம் கூறியுள்ளது.