2020ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழ்மொழி மூலமான பரீட்சார்த்திகளில் புத்தளம் ஸாஹிரா கல்லூரி மாணவி முகமட் அல்சாத் அதீபாத் ஷைனா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா அகில இலங்கை ரீதியில் இரண்டாவது நிலையைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, வடக்கில் யாழ்.மாவட்டத்தில் வழமைபோல் இம்முறையும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளில் புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலை மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகியவற்றில் அதிக மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி சித்தி பெற்றுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் 232 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். 149 பேர் சித்தியடைந்துள்ளனர். புனித பொஸ்கோ ஆரம்பப் பாடசாலையில் கூடிய எண்ணிக்கையான மாணவர்கள் தோற்றினர். 159 பேர் சித்தியடைந்துள்ளனர்.
மேற்படி இரு பாடசாலைகளிலும் ஒவ்வொரு மாணவர்கள் 195 புள்ளிகள் பெற்று முன்னிலை அடைந்துள்ளனர்.
வடக்கு மாகாணத்தில் வெளியாகியுள்ள சில முடிவுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி சுபாஸ்கரன் ஜனுஷ்கா 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அதே பாடசாலையில் 38 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
அதேபோல முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலை மாணவன் முரளிதரன் அஸ்விகன் 196 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையில் மாணவர்கள் 46 பேர் வெட்டுப்புள்ளியை விடக் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
அதேபோல கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு விசுவநாதர் ஆரம்பப் பாடசாலை மாணவன் ர.நிதுஷன் 195 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மாணவர்கள் 70 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அகில இலங்கை ரீதியில் காலி மாவட்டம் சங்கமித்தை கல்லூரி மாணவி சியாதி சண்துண்தி கருணாதிலகா மற்றும் முகமட் பர்சான், முகமட் அம்ர் சிகத் சந்துனு ஆகியோர் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.2020ஆம் ஆண்டுக்கான தரம் -5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளி பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழ்மொழிமூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு 160 புள்ளிகளும் மன்னார் மாவட்டத்துக்கு 158 புள்ளிகளும் திருகோணமலை மாவட்டத்துக்கு 159 புள்ளிகளும் கொழும்பு மாவட்டத்துக்கு 162 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.