தெற்கில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி- மற்றொருவர் காயம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தெற்குல் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூடு காரணமாக ஒருவர்உயிரிழந்துள்ள நிலையில், இன்னொருவர் காயமடைந்துள்ளார்.

அம்பலாங்கொடை, மீட்டியாகொட பிரதேசத்தில் நேற்றிரவு (மே 3) பத்துமணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மீட்டியாகொடை, தம்பஹிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின்அருகே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றுள்ளது சம்பவத்தில் ஒருவர்உயிரிழந்துள்ளார். இன்னுமொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் T-56 துப்பாக்கியொன்றினால் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Share this Article