நடைமுறைக்கு உகந்த, சூழல் ரீதியாக இயற்கைக்கு பங்கம் இழைக்காத வகையில் குடியிருப்பாளர்களின் இணக்கப்பாட்டுடன் வாழ்க்கைத்தர மேம்பாட்டுடன் கூடிய , மக்களின் மனங்களைக் கவரும் வகையில் அமையப் பெற்ற, தூய்மையான முன்மாதிரியான மாநகரத்தினை திட்டமிடலும் உருவாக்குதலும் என்ற இலக்கு நோக்கிய யாழ்.மாநகரத்தின் முன்னேற்றகரமான நெடும் பயணத்தில் ஏற்றமிகு நாள் இன்று.
யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அவர்களின் சிந்தைனையில் யாழ்.மாநகரத்தின் தூய்மையைக் கண்காணிப்பவர்களாக, மாநகர கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு உட்பட்ட குற்றங்களைப் புரிவர்களுக்கான தண்டப்பணத்தினை அறிவீடு செய்பவர்களாக. மக்களுக்கு தூய்மை மற்றும் பொறுப்புணர்வை ஊட்டுபவர்களாக ஒட்டு மொத்தத்தில் மாநகரத்தின் தூய்மையின் காவலர்களாக நியமிக்கப்பட்ட நாள்.
உலகத்தில் நேர்மை, தூய்மை, பண்பு, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட நிற ஆடையணிந்து யாழ்.மாநகரத்தின் தூய்மை கண்காணிப்பாளர்களாவும் தண்டப்பணம் அறிவீட்டாளர்களாவும் தங்கள் பணிகளினை இன்று ஏற்றுக் கொண்டார்கள்.
மாநகர மக்களுக்கு பயத்தையும் அதிகாரத்தையும் செலுத்த முற்படுவது இவர்களின் பணி அல்ல மாறாக மாநகரத்தின் தூய்மை தொடர்பில் ஒரு பொறுப்பு மிக்க மக்கள் சமூகத்தினை உருவாக்குவதே இவர்கள் கடமை.
தற்போது இப் பணி ஆரம்பக்கட்ட வசதிகளுடன் ஆரம்பகிக்கப்பட்டுள்ள போதிலும் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் கணணி மயப்படுத்தப்பட்டு ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் வரி அறவீடும் மற்றும் பற்றுச்சீட்டினை வழங்குதல் போன்ற இலத்திரனியல் சாதனங்கள் வழங்கப்படவும் உள்ளது.
எங்களுடைய மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காகவும் அவர்கள் வாழும் பிரதேசங்களின் செழுமைக்காகவும் ஒரு வினைத்திறனான மக்கள் சேவையை ஆற்றவேண்டும் என்ற நோக்குடன் மாநகர முதல்வரினால் நடைப்படுத்தப்படும் இச் செயற்றிட்டத்திற்கும் இவ் கண்காணிப்பாளர்களுக்கும் மாநகர மக்கள் தங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
எப்போதுமே ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்தை நோக்கி பயணிப்பதற்கு எமக்கு கிடைத்த பாதை என்பது, எமக்கு கிடைத்திருக்கின்ற வாய்ப்பு என்தையும் தாண்டி அது எமக்கு கிடைத்திருக்கின்ற பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளுபவர்களாளேயே அடுத்த அடுத்த படிகளை நோக்கி சொல்ல கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் அப் பொறுப்பை உணர்ந்தவர்களாக கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொள்ளலாம் என்று கூட எண்ணாமல் சுறுசுறுப்புடன் நேர்மைத் தன்மையுடன் தொடர்ந்து பயணிப்போம். ஒவ்வொரு நிமிடங்களும் இவ் மாநகரத்திற்கானவை.
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்