யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில்ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள்சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும்போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற கும்பல் , வீட்டில் இருந்த மகன்மற்றும் தந்தை இருவர் மீதும் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுதப்பி சென்றுள்ளது .
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.