தீவக மாணவர்களுக்காக இலவச கல்வி கருத்தரங்கு இன்று (ஓகஸ்ட் 06) காலை ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதி ஆண்டுதோறும் ஏற்பாடு செய்கின்ற இக்கருத்தரங்கின் தொடர்ச்சியாகவே இந்த நிகழ்வும் நடை பெற்றது.
கருத்தரங்கின் ஆரம்பத்தில் மங்கல விளக்கேற்றி கல்வி நிகழ்வு தொடக்கமளிக்கப்பட்டது. இதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்வில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் லாவண்ஜா சுகந்தன், தீவக கல்வி வலய அதிகாரிகள், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் தயாரூபன், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் சட்டத்தரணி தேவசேனாதிபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இத்தொடர் நிகழ்வுகள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிற கல்வி வலயங்களில் மட்டுமின்றி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் விரைவில் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.