முக்கிய பொருளாதார கவலைகளைத் தீர்க்கும் நோக்கில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வரிகள் தொடர்பாக இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களை ஒப்புக்கொண்டு, இலங்கைஇந்தப் பேச்சுவார்த்தைகளை வெளிப்படையாகவும் நடைமுறை ரீதியாகவும்அணுகியுள்ளது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதிகளில் 25% க்கும் அதிகமானவை மற்றும் ஆடைஏற்றுமதிகளில் சுமார் 60% அமெரிக்க சந்தைக்கு அனுப்பப்படுகிறன.
இதனால் இந்தப் பேச்சுவார்த்தைகளின் முடிவு 350,000 க்கும் மேற்பட்ட ஆடைத்துறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமானதாக அமைகிறதுஎன்று அவர் குறிப்பிட்டார்.
“எந்தவொரு தீர்மானமும் நமது பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காமல்இருப்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் ஒரு வலுவான குழுவை நியமித்துதொடர்ச்சியான உரையாடலில் ஈடுபட்டுள்ளோம்” என்று ஜனாதிபதி கூறினார்.
குறிப்பாக பரஸ்பர கட்டண விகிதங்களை 44% இலிருந்து 20% ஆகக்குறைப்பதில் அமெரிக்கத் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கும் அவர்பாராட்டு தெரிவித்தார், இது நடந்துகொண்டிருக்கும் கலந்துரையாடல்களில்குறிப்பிடத்தக்க விளைவாகும் என்று அவர் குறிப்பிட்டார்