தீபாவளியன்று (ஒக். 20) வடக்கு மாகாணத்திலுள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தால் மாவட்டச் செயலாளர்களுக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்து சமய அமைப்புக்களால், தீபாவளியன்று மதுபான விற்பனைநிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கைமுன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.