கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(ஜனவரி04) காலை 8.00 மணி முதல் இரண்டாவது இரத்ததான மற்றும் மருத்துவமுகாம் நடைபெறவுள்ளது.
பாடசாலையின் பொன்விழா தினத்தில் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உயிர்காக்கும் உன்னதமான இச்செயற்திட்டத்தில் பங்கெடுக்க வருமாறு அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் அழைத்து நிற்கின்றனர்.