திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இதுவரையான புதிய நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
அதன்படி, திருகோணமலையில் 58 பேருக்கும், மூதூரில் 28 பேருக்கும், கிண்ணியாவில் 9 பேருக்கும், தம்பலகாமத்தில் 5 பேருக்கும், சேருவிலையில் 3 பேருக்கும், மற்றும் கோமரங்கடவெல பிரிவில் ஒருவருமாக 104 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் தொற்றாளர்களோடு தொடர்புபட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.