கொழும்பில் உள்ள டாம் வீதியில் இடம்பெற்ற கொடூர சம்பவமான தலை துண்டிக்கப்பட்டு பயண பைக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் நேற்று குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை நேற்று மேற்கொண்டதன் பின்னர் அவரது சொந்த ஊரான குருவிட்ட தெப்பனாவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் சடலத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.