தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான விருப்பத்தை-ஜனாதிபதி ரணில் விக் கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்த நிலையில், குறித்த திட்டத்திற்கு அவரும் விருப்பம் வெளியிட்டதாக, பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே, குறித்த விடயம் தொடர்பில் அவர் இவ்வாறு கூறியதாக, பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் ஊடாக, சுமார் 18 கிலோமீற்றர் தூரம் இருக்கும் நிலையில், இந்தியாவிலிருந்து விரைவாக தலைமன்னார் ஊடாகப் பொருட்களை கொண்டு வாமுடியும்.
இந்த நிலையில்,காங்கேசன்துறை-காரைக்கால் கப்பல சேவையை மாற்றம் செய்து, காரைக்கால்-நாகப் பட்டினம் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு இந்தியா விரும்புவதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித் தார்.
இந்த நிலையில்,தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் பட்சத்தில், விரைவானதும் வினைதிறனான சேவையை வழங்கமுடியுமெனவும் பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூறியதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மேற்கோள் காட்டி பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
மேற்படி சந்திப்பில், வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளர் கலாநிதி கந்தையா விக்னேஸ்வரனும் கலந்து கொண்டார்.