தரம் 5 புலமைப்பரிசில் வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின் – பொலிஸில் தகவல் வழங்க கோரிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் 3 வினாக்கள் கசிந்துள்ளதாககூறப்படுவதோடு, ஏனைய வினாக்கள் கசிந்துள்ளமைக்கான ஆதாரம் இருப்பின்அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸார்கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, எதிர்வரும் ஒக். 7 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பானதகவல்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் எனபொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் முன்கூட்டியேவெளியிடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள பிரச்சினையை கருத்தில் கொண்டு, விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைஆரம்பித்துள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

Share this Article