தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாககுறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும்இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று (ஜனவரி01) மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தரபுலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாளில் உள்ளடக்கப்பட்ட 03 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்பட்டதாக கூறி உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வந்த வழக்கின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் (டிசம்பர்31) அறிவிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பின்படி, பரீட்சைகள் ஆணையாளர் அமுல்படுத்துவதற்கான மூன்றுபரிந்துரைகள் வழங்கப்பட்டன.
- விடைத்தாள்களுக்கான புள்ளிகளை வழங்கும் போது சர்ச்சைக்குரிய மூன்றுகேள்விகளை நீக்கி மதிப்பீடுகளை மேற்கொள்ளவும்.
- குறித்த மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவசபுள்ளிகளை வழங்குதல்.
- முதலாவது வினாத்தாளுக்காக பரீட்சையை மீண்டும் நடத்துதல்.
இந்த பரிந்துரைகளில், மிகவும் பொருத்தமான நடவடிக்கையை பின்பற்றுமாறுபரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, ஒவ்வொரு பரிந்துரைகளையும் அமுல்படுத்தும் போது ஏற்படக்கூடியபொருத்தமான மற்றும் பெருத்தமற்ற தாக்கங்கள் தொடர்பில் இது மிகவும்நியாயமான மற்றும் பொருத்தமான இலக்கம் 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள மூன்றுவினாக்களுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்திற்கு அமைய மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துபெறுபேறுகளை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.