‘
‘தமிழோசை ஆனந்தி‘ என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசைஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (பெப். 21) லண்டனில் காலமானார்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி சூர்யப்பிரகாசம், இலங்கைவானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில்நடித்துப்புகழ்பெற்றதுடன் சமகாலத்தில் பகுதிநேர அறிவிப்பாளராகவும்திகழ்ந்தார்.
1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை சென்றடைந்த அவர், பி.பி.சிதமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்தார்.
பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்றுதசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
அத்துடன் சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் 2006ஆம் ஆண்டிற்கானதலைவராக ஆனந்தி சூரியப்பிரகாசம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.