தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

தமிழரசுக் கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பாளர்கள் நியமனக்குழு அறிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை இறுதியாகத் தேர்வு செய்யும் நியமனக்குழு இன்று வவுனியாவில் கூடினது.

அதன்படி, யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட நியமிக்கப்பட்டவர்கள்: சிவஞானம் சிறிதரன், எம்.ஏ. சுமந்திரன், எஸ்.சி.சி. இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவேல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன், கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன், முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு வேட்பாளர்கள் மட்டக்களப்பு மாவட்ட கிளையுடன் கலந்துரையாடி பின்னர் அறிவிக்கப்படும்.

அதேவேளை, வன்னி, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பற்றிய முடிவுகளை நியமனக்குழு வரும் புதன்கிழமை (ஒக் 09) மேற்கொள்ளவுள்ளது.

Share this Article