தபால் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இன்று(நவம்பர் 10) முதல் தமது கடமைகளை வழமை போல முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக தேங்கியுள்ள 10 இலட்சம் தபால் பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மற்றும் கண்டி தபால் அலுவலகங்களை தனியார் தரப்பினருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் தொழிற்சங்கங்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.