தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்பு உடனவோபிஅமுலுக்கு வரும் வகையில் நிறைவுக்கு வந்துள்ளது.
அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு பின்னர் ஏற்பட்ட இணக்கப்பாடுகளுக்குஅமைய, இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்குவந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின்இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த தபால் ஊழியர்கள், தங்கள் தொழிற்சங்கநடவடிக்கைகளை கைவிட்டு, திட்டமிட்டபடி தங்கள் கடமைகளை இன்று (ஓகஸ்ட் 24) மாலை 4.00 மணி முதல் மேற்கொள்ள இணங்கியுள்ளதாக, விடயத்திற்குபொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கும் விடயத்திற்குபொறுப்பான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிற்கும் இடையில் இன்றுநடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர், அமைச்சர் ஊடகங்களுக்குஇதனை குறிப்பிட்டார்.