நேற்றைய தினம் நெடுந்தாரகை படகுச்சேவை பயணிகள் சேவைக்காக இடம் பெறும் என அறிவிக்கப்ப்பட்டமைக்கு அமைவாக மக்கள் இன்றைய தினம் அதிகளவானவர்கள் நெடுந்தீவு இறங்கு துறைமுகத்திற்கு வருகை தந்து படகில் ஏறிய போதும் கடும் காற்றுக் காரணமாக நெடுந்தாரகை படகினை செலுத்த முடியாது என தெரிவித்தமைக்கு அமைவாக அனைத்து பிரயாணிகளும் மீளவும் இறங்கு துறைமுகத்தில் இறக்கி விடப்பட்டனர்
நிலமையினைக் கருத்திற் கொண்டு பின்னர் காளிகாம்பள் 1 படகு துறைமுகத்தில் காத்திருந்த மக்களை அழைத்துக் கொண்டு குறிகட்டுவான் நோக்கி புறப்பட்டது.
படகில் வரும் மக்களுக்காக ஏற்கனவே ஒழுங்கு படுத்தப்பட்ட இலங்கை போக்கவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து படகுவருகைக்காக காத்திருந்து மக்களை யாழ் நோக்கி அழைத்து சென்றது.
மீளவும் யாழில் இருந்து மதியம் 1.00 மணிக்கு குறிகட்டுவான் நோக்கி புறப்படவுள்ளதுடன் மலை 03.00 மணிக்கு காளிகாம்பாள் 1 படகு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு நோக்கி புறப்படும்.
கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் நெடுந்தீவு மக்கள் தங்களையும் நெடுந்தீவினையும் பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் அவசியமற்ற பிரயாணங்களைத் தவிர்த்துக் கொள்வதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது நன்று