By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > தொழில்நுட்பம் > டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்
தொழில்நுட்பம்

டுவிற்றர் கணக்குகளை சரிபார்க்கும் புதிய முறை: ஜனவரி 20 முதல் தொடக்கம்

Last updated: 2020/12/30 at 2:44 PM
Published December 30, 2020 660 Views
Share
1 Min Read
SHARE

ஜனவரி 20 முதல் தங்கள் தளத்தில் புதிதாக சரிபார்க்கும் முறையும், விதிகளும் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், சரிபார்க்கப்பட்ட (verified) கணக்குகள் முழுமையற்றோ, பயன்படுத்தப்படாமலோ இருந்தால் அதன் சரிபார்க்கப்பட்ட சின்னம் (badge) நீக்கப்படும் என்றும் டுவீற்றர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய விதிகளின் படி, மீண்டும் மீண்டும் அதிகமாக தங்களது தளத்தின் விதிகளை மீறிய கணக்குகளின் சின்னமும் நீக்கப்படும் என்று டுவீற்றர் தெரிவித்துள்ளது.

“அது போன்ற கணக்குகளை ஒவ்வொன்றாக நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களது விதிகளை அமல்படுத்துவதற்கும், சரிபார்த்தலுக்கும் இடையே இருக்கும் தொடர்பை வரும் வருடத்தில் மேம்படுத்துவோம். உங்கள் கணக்கிலிருந்து அந்தச் சின்னம் நீக்கப்படும் நிலை ஏற்பட்டால் அது குறித்து உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.

அந்தச் சின்னம் நீக்கப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உங்களுக்குச் சொல்லப்படும். ஜனவரி 20ஆம் தேதிக்கு முன் அந்த மாற்றங்களை நீங்கள் செய்துவிட்டால், அந்தச் சின்னத்தை இழக்க மாட்டீர்கள் என்று டுவீற்றர் தெரிவித்துள்ளது.

ஒரு கணக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை சரிபார்த்து வெரிஃபைட் என்கிற சின்னத்தைக் கொடுக்கும் வழக்கத்தை மூன்று வருடங்களுக்கு முன் டுவீற்றர் நிறுத்தி வைத்தது. 2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் மீண்டும் இது தொடங்கும் என கடந்த மாதம் அறிவித்திருந்தது.

செயல்படாத கணக்குகளிலிருந்து இந்தச் சின்னத்தை தானாக நீக்கும் முறையைச் செய்யப்போவதில்லை என்றும், இறந்து போனவர்களின் கணக்குகளை, இன்ஸ்டாகிராமில் இருப்பதைப் போல, அவர்களின் நினைவாகப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சரிபார்க்கும் முறை குறித்து டுவீற்றர் பயனர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. கிட்டத்தட்ட 22 ஆயிரம் பேர் இதில் பங்கெடுத்திருந்தனர். இதை வைத்து புதிய மாற்றங்களை டுவீற்றர் அறிமுகம் செய்யவிருக்கிறது.

You Might Also Like

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது

admin December 30, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article காலையில் படகு பழுதடைந்தமையால் போக்குவரத்து ஸ்தம்பிதம்
Next Article பளைப் பகுதியில் 55 மோட்டாா் குண்டுகள் மீட்பு
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

தொழில்நுட்பம்

வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 முதல் பழைய ஒஎஸ் ஸ்மார்ட்போன்களில் இயங்காது

December 30, 2020

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?