வடக்கில் அடிக்கடி இடம்பெறும் விபத்துக்களால் பலரின் உயிர்கள் அநியாயமாக பறிபோவதாக வைத்தியர் Dr T. சத்திய மூர்த்தி கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவொன்றினையும் இட்டுள்ளார். அதில்,
இன்று (ஜூலை 05) காலை பூனகரி ஊடாக பயணத்தை மேற்கொண்டு இருந்தேன். வழியில் உந்துருளியில் பயணித்த இளைஞன் டிப்பர் வாகனத்தில் மோதுண்டு அந்த இடத்திலேயே உயிரிழந்தமை மிகவும் வருத்தத்துக்குரியது.
இன்றைய ஞாயிற்றுக்கிழமையை குதூகலத்தோடு கொண்டாடி மேலும் பல வருடங்கள் வாழ வேண்டும் என எண்ணியவர் ஒரு சில வினாடிகளில் திடீரென மறைந்து விட்டார்
டிப்பர் வாகனங்களினால் அதிகளவு உயிரிழப்பு ஏற்படுகின்றது.
உந்துருளியில் பயணிப்பவர்கள் பலர் விபத்தில் நமது பகுதியில் உயிரிழக்கிறார்கள்.
தினசரி உந்துருளி பயணத்தின் முன் மனதில் உறுதி எடுக்கப்பட வேண்டிய விடயங்கள்:
1. விரைவாக பயணிப்பதில்லை.
2. செல்ல வேண்டிய காரியத்திற்கு / கடமைக்கு தாமதமானாலும் விரைவாக பயனிப்பதில்லை.
3. வேறு ஒருவர் விரைவாக பயணித்தாலும் அவரைப் அவர் பயணிக்கும் விரைவு வேகத்தில் பின்தொடர்வது /அவரை முந்திச் செல்வது என்ற எண்ணத்தை கைவிடல்.
4. தற்போது அடிக்கடி உயிர்களை காவு கொள்ளும் டிப்பர் வாகனத்தை கண்டவுடன் மிக அவதானமாக வாகனத்தை செலுத்த வேண்டும் என உறுதி கொள்ள வேண்டும்.
5. இன்றைய பயணம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டு அதற்கான ஆயத்தங்களை சரிசெய்துகொள்ளல்.