ஞானசாரதேரரை கைதுசெய்வதற்கு பிடியாணையை பிறப்பித்தது நீதிமன்றம் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணைபிறப்பித்துள்ளது.

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கொன்றின்போது நீதிமன்றத்தில்ஆஜராகாதமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைபிறப்பித்துள்ளது.

2014ம் ஆண்டு ஸ்லேவ் ஐலண்ட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில்முஸ்லீம்களின் மதநம்பிக்கைகளை அவமரியாதை செய்யும் விதத்தில் கருத்துதெரிவித்ததன் மூலம் ஞானசார தேரர் குரோத பேச்சினைவெளிப்படுத்தியிருந்தார் என அரசதரப்பு நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இந்த விடயம் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டவேளை ஞானசாரதேரர் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து அவரைகைதுசெய்வதற்கான பிடியாணையை நீதிபதி பிறப்பித்தார்

Share this Article