ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையை தொடர்ந்து, நாளை (21) காலை 9.30 மணி வரையில் பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதாக பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைய அதனை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கியுள்ள மனிதநேய பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் −
பௌத்த மதத்திற்கு முதலிடம் கொடுப்பதை உறுதிப்படுத்தி, இந்நாட்டில் வாழும் அனைத்து குடிமக்களும் தாம் விரும்பும் மதங்களை பின்பற்றும் சுதந்திரம், மிகவும் சிறப்பாக பாதுகாப்புமிக்கதாக காணப்படுவதானது, பொதுமக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது.
நாட்டின் பாரம்பரிய உரிமைகள், கலாசாரங்களை பாதுகாப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது..
காலம் காலமாக தாம் வாழ்ந்து வரும் காணிகளுக்கு உரிய காணி உறுதிப்பத்திரம் இன்றி வாழும் மக்கள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் உரிய முறையில் காணி உறுதிப்பத்திரத்தை வழங்குவோம்.
சிலோன் டீ “CEYLON TEA” பெயரை மீள வலுப்படுத்த நடவடிக்கை எடுப்பேன்
முள் தேங்காய் (கட்டுபொல்) விவசாயம் முழுமையாக நிறுத்தப்படும்
இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டு மீனவர்கள் பிரவேசித்து, மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் முழுமையாக தடுத்து நிறுத்தப்படும்
புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்படும் − ஜனாதிபதி அரசாங்க கொள்கை பிரகடன உரையில் தெரிவிப்பு
தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும்
ந்தவித அணி வகுப்புக்களும் இன்றி, மிகவும் இலகுவான, செலவீனங்கள் அற்ற முறையில் பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி இன்று பிரவேசித்திருந்தார்