ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்பு உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் நாள் அறிவிக்கப்படும்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

எவ்வாறாயினும், சிற்சில காரணங்களினால் தேர்தல் குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் வேட்புமனு கோரல் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னதாக தேர்தல் குறித்து அறிவிக்கப்படாத விடத்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக  ஃபெவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Share this Article