19.01.2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணி வானிலை அவதானிப்பு.
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைத்துவரும் கன மழை;
1. நாளை முதல் கிழக்கு மாகாணத்திற்கு மழை படிப்படியாக குறைவடையும். கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது. ஆனாலும் சில பகுதிகளுக்கு சற்று கனமழை கிடைக்கும்.
2. நாளையும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல்கனமானது வரை மழை கிடைக்கும்.
3. எதிர்வரும் 20.01.2025 முதல் 22.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல சிறிய அளவிலான மழை தொடரும்.
4. எதிர்வரும் 24.01.2025 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச்சுழற்சி உருவாகுகின்றது.
5. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும்எதிர்வரும் 28.01.2025 முதல் 02.02.2025 வரை மிதமானது முதல் கனமானதுவரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
6. எதிர்வரும் 21.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள்கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
7. கிழக்கு மாகாணத்தின் சேனாநாயக்க சமுத்திரம், உன்னிச்சை, வாகனேரி, நவகிரி, குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாஓயா, கல்லோயா, மாதுறு ஓயா, கும்புக்கன் ஓயா, யான் ஓயா போன்றன சில இடங்களில் கரைமேவிப் பாய்கின்றன.
8. வடக்கு மாகாணத்தில் இரணைமடு, வவுனிக்குளம், கல்மடு, தண்ணி முறிப்பு, கணுக்கேணி, போன்றனவும் வான் பாய்கின்றன.
9. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் நாளைய தினமும்அவதானமாக இருப்பது அவசியம்.
10. கிழக்கு மாகாணங்களின் பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறைவழங்கியமை மிகச் சரியான முடிவு. ஏனெனில் தற்போது வரை கிழக்குமாகாணங்களின் மேற்பரப்பு நீர்நிலைகள் கணிசமான அளவு நீரைவெளியேற்றுகின்றன.