இலங்கை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடக்காமல் எஞ்சியிருந்த பாடப் பரீட்சைகள் வரும் ஜனவரி 12 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய அனர்த்த சூழ்நிலை காரணமாக உயர்தரப் பரீட்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.
இதன்மூலம், பிற வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகள் இவ்வருடம் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) மாணவர்களுக்கு மட்டும் மூன்றாம் தவணை பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.